டாகுமெண்ட்-களை ஸ்கேன் செய்ய நம்பர் ஒன் ஆப் இது தான்.

 

tamil tech news

கோவிட் 19 கொள்ளை நோயால் இன்று அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி ஆசிரியர் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் தமது பாடங்கள், வினாத்தாள்களை வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தமது மாணவர்களுக்கு வழங்கி கற்பித்து வருகின்றனர்.அதே நேரம் மாணவர்களும் தமது விடை பத்திரங்களை போட்டோ பிடித்து இணையத்தின் ஊடாகவே அனுப்பி வைக்கின்றனர்.

அடோபி ஸ்கேன்: மிகச்சிறந்த ஒரு ஸ்கேனிங் ஆப்

நான் மேலே குறிப்பிட்டது போன்ற சந்தர்ப்பங்களில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கும் உதவுகிறது அடோபி ஸ்கேன் எனும் ஆப்.

ஸ்கேனர் இயந்திரத்திற்கு நிகரான ஸ்கேனிங் வசதி:

இது உங்கள் பாட புத்தகங்கள், பயிற்சி கொப்பிகள், வினாத்தாள்கள், விடை பத்திரங்கள் போன்ற எந்த ஒரு டாகுமெண்ட்-ஐயும் மிகத் தெளிவாக போட்டோ பிடிக்க உதவுகின்றது.

டாகுமெண்ட்-களை பி.டி.எப் வடிவில் சேமிக்கக் கூடிய வசதி:

இந்த ஆப் மூலம் நீங்கள் பிடிக்கக்கூடிய டாகுமெண்ட்-களை இது பி.டி.எப் வடிவத்தில் சேமித்துக் கொள்ளவும் உதவுகிறது. (படிப்பதற்கும் பிரிண்ட் அவுட் செய்வதற்கும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மிக பொருத்தமான வடிவம் பி.டி.எப் (PDF) ஆகும்)

பல பக்கங்களை கொண்ட ஒரு பி.டி.எப் (PDF) பைல்:

மேலும் பக்கம் பக்கமாக இருக்கக்கூடிய நீண்ட புத்தகங்கள், டாகுமெண்ட்-கள் போன்றவற்றையும் கூட மிகக் குறுகிய நேரத்தில் போட்டோ பிடித்து ஒரு பி.டி.எப் (PDF) பைல் ஆக பெற்றுக் கொள்வதற்கான வசதியை இது கொண்டுள்ளது.

தெளிவற்ற போட்டோ-க்களையும் தெளிவாக மாற்றலாம்:

அத்துடன் நீங்கள் ஏற்கனவே உங்கள் மொபைல் போன் கேமரா மூலம் பிடித்த மங்கலான போட்டோ-க்களை கூட இந்த ஆப் இன் உதவியுடன் ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு டிஜிட்டல் ஆவணமாக மாற்றிக் கொள்ள முடியும்.

adobe scan tamil tech pure tamil tech

அடோபி ஸ்கேன்: பயன்படுத்துவது எப்படி?

  1. அடோபி ஸ்கேன் ஆப் ஐ திறக்க:

    இதனை ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் ஐபோன்-களுக்கு ஆப் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கேமரா மூலம் ஸ்கேன் செய்க:
  1. டாகுமெண்ட்-இற்கு முன்னாள் உங்கள் மொபைல் போனை நிலையாக வைத்து ஸ்கேன் செய்க.

  1. நான்கு மூலைகளையும் சரி செய்க.
ஸ்கேன் செய்யப்பட்ட டாகுமெண்ட்-இன் நான்கு முலைகளும்
அடோபி ஸ்கேன்ஆப் ஆல் கண்டறியப்பட்டு தெரிவு செய்யப்பட்டு
இருக்கும். இருப்பினும் அதில் குறைபாடுகள் இருந்தால் உங்களால்
அதனை சரி செய்துகொள்ள முடியும்.

  1. Adobe Scan, அடோபி ஸ்கேன்

படிமுறை 2, மற்றும் 3 ஐ பின்பற்றி அடுத்தடுத்த பக்கங்களை
ஸ்கேன் செய்க.
ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை கொண்ட டாகுமெண்ட் எனின்,
படிமுறை 2, மற்றும் 3 ஐ பின்பற்றி அனைத்து பக்கங்களையும் ஸ்கேன்
செய்து கொள்க.

Continue பட்டனை அழுத்துக.

ஸ்கேன் செய்து முடிந்தவுடன் Continue பட்டனை அழுத்துக.
பக்கங்களை சரிப்படுத்துக.

Continue பட்டனை அழுத்தியதை தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்ட
அனைத்து பக்கங்களும் தோன்றும். ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை
கொண்ட ஆவணம் எனின் அதன் பக்கங்களை ஒழுங்கு முறை
படுத்திக் கொள்க.

Save PDF பட்டனை அழுத்துங்க.
வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள Save PDF பட்டனை
அழுத்துவதன் மூலம் நீங்கள் ஸ்கேன் செய்த டாகுமெண்ட் ஐ பி.டி.எப்
(PDF) பைல் ஆக மாற்றிக் கொள்ள முடியும்.
  1. app to scan documents

இனி அதனை சேவ்/ஷேர் செய்ய முடியும்.

நீங்கள் ஸ்கேன் செய்த டாகுமெண்ட் ஐ உங்கள் போனில் சேமித்துக்
கொள்ளவோ அல்லது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சேவைகள் மூலம்
ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ முடியும்.


Mobile scanning app
குறிப்பு:

இந்த ஆப் ஐ பயன்படுத்துவதற்கு உங்கள் மின்னஞ்சல் (E-mail)

முகவரியை பயன்படுத்தி அல்லது பேஸ்புக், கூகுள் கணக்கை

பயன்படுத்தி இலவச அடோபி அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி

உள்நுழைய வேண்டும்.

இறுதிக் கருத்து:

இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு மைக்ரோசாப்ட் லென்ஸ், கெம் ஸ்கேனர் போன்ற இன்னும் பல செயலிகளும் உள்ளன.

இருப்பினும் எனது அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை விட இந்த

ஆப் பயன்படுத்துவதற்கு இலகுவானதாகவும் சிறந்த வசதிகளை

தரக்கூடியதாகவும் உள்ளது.

எனவே ஒரு ஸ்கேனர் இயந்திரத்தின் உதவியின்றி ஒரு ஆவணத்தை

அப்படியே ஸ்கேன் செய்தது போல் பெற்றுக்கொள்ள இந்த இலவச

ஆப் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.




0 comments:

கருத்துரையிடுக